Workers of all countries, Oppressed nations unite!

Monday, 24 November 2008

கருணாநிதியை தோற்கடித்த மகிந்த: கொழும்பு வார ஏடுகள் புகழாரம்

கருணாநிதி ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டி
கேள்வி: உடனடி தீர்வு, போர் நிறுத்தம்தான் என்றால் நோர்வே தூதுக்குழு தலையிட்டதுபோல் இலங்கையில் உடனடி போர் நிறுத்தத்திற்கு முயற்சிக்கப்படுமா?

பதில்: இப்பொழுது நோர்வே மாதிரி எல்லாம் ஆகாது. அப்படி பேச்சு எதுவும் இல்லை.கேள்வி: போர் நிறுத்தம் உண்டாபதில்: கிட்டத்தட்ட அவர் சொல்கிற மாதிரி 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிற ஒரு போராட்டம் இது. இது நான்கு நாட்களில் முடியாது. நாம் போர் நிறுத்தம் வேண்டும் என்று
சொன்னது, பொதுமக்களை இன்னல்களிலிருந்து காப்பாற்றுவதற்காக தான்.
இப்பொழுது சிறிலங்கா அரசு, நாங்கள் பொதுமக்களை நிச்சயமாக தாக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை அளித்திருக்கிறார்கள்.

கருணாநிதியை தோற்கடித்த மகிந்த: கொழும்பு வார ஏடுகள் புகழாரம் [திங்கட்கிழமை, 24 நவம்பர் 2008, 10:27 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]

தமிழ்நாட்டின் அழுத்தங்களை முறியடித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்திய மத்திய அரசின் அனுசரணையுடன் போரை தொடர்ந்து முன்னெடுத்து வருவது தென்பகுதியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில, சிங்கள வார ஏடுகள் தமது மகிழ்சியை தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அந்த வார ஏடுகள் மேலும் தெரிவித்துள்ளதாவது: மகிந்த ராஜபக்ச கடந்த 17 ஆம் நாள் தனது 63 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்த பிறந்த நாள் அவருக்கு இரண்டு மகிழ்ச்சியான தகவல்களை கொண்டிருந்தன. ஒன்று பூநகரி பிரதேசத்தை படையினர் கைப்பற்றியது. இரண்டாவது தமிழ்நாட்டின் அழுத்தத்தை முறியடித்தது. போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறும், வான் தாக்குதல்களை நிறுத்துமாறும் தமிழக மக்களும் முதல்வர் கருணாநிதியும் மேற்கொண்ட அழுத்தங்களை மகிந்த வெற்றிகரமாக தோற்கடித்து போரை தொடர்ந்து மேற்கொண்டு வருவது தென்பகுதி ஊடகங்களில் பாரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடம்பெற்று வரும் போருக்கு இந்திய மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியதால் உற்சாகம் அடைந்த மகிந்த விடுதலைப் புலிகளை சரணடையுமாறு அறைகூவல் விடுத்துள்ளார் என அந்த ஏடுகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ஆட்சி புரியும் இந்திய மத்திய அரசின் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் தமிழகம் ஏறத்தாழ 39 உறுப்பினர்களை கொண்டுள்ள போதும் அதன் வலிமையை புறந்தள்ளி சிறிலங்கா அரசு இந்திய மத்திய அரசை தனது பிடிக்குள் கொண்டு வந்துள்ளது பெரும் ஆச்சரியமானது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tuesday, 18 November 2008

இராஜபட்சியின் இந்திய விஜயத்தை எதிர்த்து ம.ஜ.க.சுவரொட்டிப் போராட்டம்

புதுடில்லியில் மகிந்த ராஜபக்ச திட்டவட்ட அறிவிப்பு
போரை நிறுத்தவே முடியாது
[வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 09:48 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]
இலங்கையின் போரை நிறுத்தவே முடியாது- ஆனால் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பேன் என்று இந்தியத் தலைநகர் புதுடில்லியில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார். புதுடில்லி சென்றுள்ள மகிந்த ராஜபக்ச இன்று அந்நாட்டு ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:
1) தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் போரை நிறுத்த முடியும்.
2) இலங்கையில் வாழும் தமிழர்கள் என் நாட்டு குடிமக்கள். அவர்களைப் பாதுகாப்பது எனது பணி என்பதை இந்தியப் பிரதமருக்கும் உலக நாடுகளுக்கும் தெரிவிக்கிறேன்.
3) இந்தியாவில் பயிற்சி பெற்ற 1,200 தமிழர்களை சிறிலங்கா படையில் இணைத்துக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.

Thursday, 6 November 2008

இலங்கை யுத்தம்: இனமானக் காவலர்களும் ஈழத்துக் கால்நடைகளும்!


கருணாநிதி ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டி



கேள்வி: உடனடி தீர்வு, போர் நிறுத்தம்தான் என்றால் நோர்வே தூதுக்குழு தலையிட்டதுபோல் இலங்கையில் உடனடி போர் நிறுத்தத்திற்கு முயற்சிக்கப்படுமா?

பதில்: இப்பொழுது நோர்வே மாதிரி எல்லாம் ஆகாது. அப்படி பேச்சு எதுவும் இல்லை.
கேள்வி: போர் நிறுத்தம் உண்டா?

பதில்: கிட்டத்தட்ட அவர் சொல்கிற மாதிரி 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிற ஒரு போராட்டம் இது. இது நான்கு நாட்களில் முடியாது. நாம் போர் நிறுத்தம் வேண்டும் என்று சொன்னது, பொதுமக்களை இன்னல்களிலிருந்து காப்பாற்றுவதற்காக தான்.இப்பொழுது சிறிலங்கா அரசு, நாங்கள் பொதுமக்களை நிச்சயமாக தாக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை அளித்திருக்கிறார்கள்.