Workers of all countries, Oppressed nations unite!

Friday, 24 April 2009

இந்திய பாராளுமன்றத் தேர்தல் 2009

இந்திய பாராளுமன்றத் தேர்தல் 2009
இந்திய திருநாட்டின் இறையாண்மையை ஏகாதிபத்தியங்களுக்கு அடகுவைக்கும் ஒப்பந்தங்களைத் தடுக்க அதிகாரமற்ற போலிப் பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
* உலக முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்துவதற்குச் சேவை செய்பவையே அனைத்து பாராளுமன்றக் கட்சிகள்!
* ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை அடிமைப்படுத்தும் அரசியல், பொருளாதார, இராணுவ ஒப்பந்தங்களைத் தடுப்பதற்கு அதிகாரமற்றவையே - அரசியல் சட்டமும் போலிப் பாராளுமன்றமும்!
* ‘தேசிய ஒருமைப்பாடு’, ‘நிலையான ஆட்சி’ பேசும் காங்கிரஸ் அணியும் - ‘இராமன், ரொட்டி’ பேசும் இந்துத்துவா பா.ஜ.க அணியும் ‘மத சார்பின்மை’ பேசும் திருத்தல்வாத அணியும், முதாளித்துவ நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்துவதற்கு சேவை செய்யும் அணிகளே!
* தி.மு.க, அ.தி.மு.க கூட்டணிகள் ஈழத்தமிழருக்காக கண்ணீர் வடிப்பது தேர்தல் சந்தர்ப்பவாதமே!
* திருத்தல்வாதிகள் – தரகுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ மத்திய அரசில் பங்கு கொள்வது – பாட்டாளிவர்க்கத்திற்குச் செய்யும் துரோகமே!
* போலிப் பாராளுமன்றத்தேர்தலைப் புறக்கணிப்போம்!
* சோவியத் வடிவ மக்கள் ஜனநாயக அரசமைக்க புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்- தமிழ்நாடு

Wednesday, 22 April 2009

மே 1 2009 பொதுக்கூட்டம் ஊர்வலம்! வாருங்கள்! விடுதலை வேண்டி முழங்குங்கள்!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, இளைஞர்களே, மாணவ மாணவியரே, முற்போக்கு அறிவு ஜீவிகளே!
2009 ஆண்டின் மே தினம் உலகெங்கும் புரட்சிகர கொந்தளிப்பு கொழுந்துவிட்டு எரியும் வேளையில் பிறக்கவிருக்கிறது.உலகப் பாட்டாளிவர்க்கப் படையணியின் ஒரு பகுதியான இந்திய-தமிழக பாட்டாளிவர்க்கத்தின் முன்னணிப்படையாகிய நாம், நமது காலத்தை மாற்றியமைக்கும் புரட்சிகர முழக்கங்களுடன் மே 1 2009 வெள்ளிக்கிழமை களத்தில் இறங்குகின்றோம்.எமது இவ் அரசியல் பிரச்சார பொதுக்கூட்டத்திலும், ஊர்வலத்திலும், மக்கள் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்குமாறு தங்களை உரிமையுடன் அழைக்கின்றோம்.

* உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒன்று சேருங்கள்!

* மார்கசிய லெனினிய மா ஓ செதுங் சிந்தனை வெல்க!!

Tuesday, 14 April 2009

2009 மே நாள் வாழ்க!

2009 மே நாள் வாழ்க!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, மாணவர்களே, இளைஞர்களே, முற்போக்கு அறிவுஜீவிகளே!
மே தினம் என்பது உலகத்தொழிலாள வர்க்க இயக்கம் தனது சர்வதேசிய மற்றும் தேசிய புரட்சிகரக் கடமைகளை நிறைவேற்ற சபதம் ஏற்கும் நாளாகும்.இதனால் சர்வதேசிய பாட்டாளி வர்க்க இயக்கத்தின் ஒரு அங்கமாகிய இந்திய-தமிழக புரட்சியாளர்களாகிய நாமும் நமது சர்வதேசிய மற்றும் தேசிய புரட்சிகரக் கடமைகளை வரையறை செய்து அவற்றை நிறைவேற்ற சபதம் ஏற்கின்றோம்.இன்று மாட்சிமை தங்கிய அரசாங்கங்கள் முதல் மடாலயங்கள் வரை மே தினத்தை கொண்டாடாதோர் எவரும் இல்லை.இவர்கள் மேதினத்தின் புரட்சிகர குணாம்சத்தைச் சீரழித்து வெறும் கேளிக்கையாக்க முயலுகின்றனர்.இந்த விசக்கிருமிகள் இந்திய பாட்டாளி வர்க்க இயக்கத்துக்குள் பரவிவிடாமல் தடுக்க பின்வரும் புரட்சிகர கடமைகளை நிறைவேற்ற அணிதிரளுமாறு மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், -மேதினி போற்றும் மேதினம் 2009 இல்- அறை கூவல் விடுக்கின்றது.
உலக முதலாளித்துவப் பொது நெருக்கடிக்குக் காரணமான தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைகளை முறியடிப்போம்.!
 ஏகாதிபத்தியங்களின் நெருக்கடிச் சுமையை ஒடுக்கப்பட்ட நாடுகள் மீதும் மக்கள் மீதும் சுமத்துவதை எதிர்ப்போம்!
 நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அமெரிக்கா மேற்கொள்ளும் யுத்தச் சதிகளை முறியடிப்போம்!
அமெரிக்க ஏகாதிபத்தியமே!
 ஈராக், ஆப்கனிலிருந்து வெளியேறு!
 வடகொரியாவையும், ஈரானையும் மிரட்டாதே!
 அந்நிய நாடுகளில் அமைத்துள்ள தளங்களைக் கலை! படைகளைத் திரும்பப்பெறு!
 தமிழீழ விடுதலைப் போரை நசுக்கும் - அமெரிக்க, இந்திய, இலங்கை அரசுகளின் பாசிச யுத்தத்தை எதிர்ப்போம்!
இந்திய அரசே!
 காஷ்மீர் மீதான யுத்தத்தை நிறுத்து!
 கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு மூலம் அரசியல் தீர்வுகாண்!
 தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்திய அரசுக்கு மாற்றாக - பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தேசிய இனக் கூட்டாட்சி மக்கள் குடியரசுக்காகப் போராடுவோம்!
இந்திய அரசே!
 அமெரிக்காவுடனான இராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்களை இரத்துச் செய்!
 பன்னாட்டுக் கம்பெனிகளின் மூலதனங்களைப் பறிமுதல் செய்!
 அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் அளிக்கும் உதவிகளை நிறுத்து!
 தேசியத் தொழில்களுக்கும் வேளாண்மைக்கும் பாதுகாப்புக் கொடு!
 தொழிலாளர்கள் மீது சுமத்தும் வேலைப்பளு, ஆட்குறைப்பு, ஆலை மூடல் நடவடிக்கைகளை நிறுத்து!
 தொழிற்சங்க, ஜனநாயக உரிமைகளைப் பறிக்காதே!
 நெருக்கடியிலிருந்து மீளவும் - உள்நாட்டுச் சந்தையைப் பெருக்கவும் நிலச் சீர்திருத்தத்திற்காகப் போராடுவோம்!
 வன்கொடுமைக்கெதிராக தாழ்த்தப்பட்டவர்கள் தற்காத்துக் கொள்ள ஆயுதம் ஏந்தும் உரிமை கொடு!
 ஆளும் வர்க்கங்களை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற சேவை செய்யும், 'இந்துத்துவா', 'ஒருமைப்பாடு' பாசிசங்களை முறியடிப்போம்!
 போலிப் பாராளுமன்ற ஆட்சிமுறைக்கு மாற்றாக 'சோவியத்வடிவ' மக்கள் ஜனநாயக அரசமைக்க புரட்சிப்பாதையில் அணிதிரள்வோம்!
உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒன்றுபடுவோம்!
மார்க்சிய - லெனினிய - மாவோ சிந்தனை வெல்க!!
=============================
===================================================