இத்தாக்குதலில் புதுமுறிப்புக்கு தெற்கான பகுதியில் உள்ள மக்கள் வாழ்விடங்களில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.
இதில் அக்கராயன் கூட்டுறவுச்சங்கத்தின் முன்னாள் முகாமையாளரான சின்னையா இராமலிங்கம் (வயது 65) அவரின் மகனான வன்னேரிக்குளம் ஐயனார்புரம் பாடசாலை ஆசிரியர் இராமலிங்கம் விஜயானந்தன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் அப்பகுதி மக்கள் பெரும் அவலப்பட்டுள்ளனர்.மழை வேளையில் மக்கள் சிதறி ஓடி அவலப்பட்டனர். மக்களின் 31 வீடுகள் படையினரின் எறிகணைத் தாக்குதலில் அழிந்தும் சேதமாகியும் உள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பாடசாலைக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் 1,300 மாணவர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். பரந்தன் குமரபுரம் கிராமத்தில் உள்ள பரந்தன் இந்து வித்தியாலயத்துக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:15 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் மிக் - 27 ரக வானூர்திகள் இரண்டு குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் குடியிருப்பு மற்றும் போக்குவரத்து வீதியை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சுமார் 1,300 மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்த வேளையில் பரந்தன் சந்தை மற்றும் நகரம் செறிவான மக்களுடன் இயங்கிக்கொண்டிருந்த வேளையில் மக்களுக்கு அவலத்தையும் அழிவையும் ஏற்படுத்தும் வகையில் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின.இதில் வீதியால் சென்று கொண்டிருந்த மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் எட்டு வீடுகள் அழிந்துள்ளதுடன் பத்து வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. வீடுகளில் இருந்த பொதுமக்கள் மூவரும், மாணவர்கள் மூவருமாக ஆறு பேர் காயமடைந்தனர்.குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற போது பாடசாலை மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர். வான்படையின் மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதலால் மாணவர்கள் பதறி- அவலப்பட்டு- சிதறி ஓடினர்.மாணவர் அவலப்பட்டு காப்பகழிகளுள்ளும் வெளியிலும் கதறி அழுதவாறு சிதறியோடினர். பாடசாலை வளாகத்திலும் வகுப்பறைகளிலும் குண்டுச்சிதறல்கள் வீழ்ந்துள்ளன. இதில் மாணவர்கள் காயமடைந்தனர்.வான்படையின் குண்டுத்தாக்குதலினால் பரந்தன் நகரம் அவலப்பட்டு சிதறி ஓடியது.திட்டமிட்டு சிறிலங்கா வான்படை மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து இக்குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது.குண்டுத்தாக்குதலில் கிறிஸ்டி (வயது 16) எனும் மாணவனின் வாயில் குண்டுச்சிதறல் தாக்கியுள்ளதுடன் கனிஸ்டன், தனுசன் ஆகிய மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.வீடுகளிலிருந்து காயமடைந்த சுகுமார் ரதி (வயது 47), பத்மசீலன் (வயது 37), வீ.காண்டீபன் (வயது 29) ஆகியோர் கிளிநொச்சி நகரில் இயங்கிவரும் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வீதியில் சென்று கொண்டிருந்த நிலையில் கொல்லப்பட்ட மூன்று பேரும் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. மேலும் ஐந்து பேர் பேர் சிறுகாயங்களுக்குள்ளாகினர்.ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் எழுச்சி காரணமாக இராஜதந்திர அழுத்தங்களுக்கு அஞ்சி கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பொதுமக்கள் மீதான வான்தாக்குதலை இடைநிறுத்தி வைத்திருந்த சிறிலங்கா அரசு-எக்காரணம் கொண்டும் மத்திய அரசுக்கு நெருக்கடியை தரமாட்டோம் என்று தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அறிக்கை விடுத்ததன் மூலம் தான் முன்னர் விதித்திருந்த பதவி விலகல் காலக்கெடுவிலிருந்து விலகியதனையடுத்து-சிறிலங்கா அரசு பொதுமக்கள் மீதான வான் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாக கொழும்பு அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
பரந்தன் வான் தாக்குதலுக்கும் அதனை மூடிமறைத்த சிறிலங்கா இராணுவப் பேச்சாளருக்கும் நா.உ. கஜேந்திரன் கண்டனம்
[புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 08:15 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் சிறிலங்கா வான்படை நேற்று நடத்திய தாக்குதலுக்கும், அதனை மூடிமறைத்தசிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கிளிநொச்சியின் பரந்தன் சந்தியை அண்டிய குமரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நேற்றுசெவ்வாய்கிழமை (28.10.08) அன்று நடத்திய குண்டுத்தாக்குதலில் வீதியில் பயணம் செய்து கொண்டிருந்த மூன்று பொதுமக்கள்தாக்குதல் நடைபெற்ற இடத்திலேயே உடல் சிதறிப் பலியாகியுள்ளனர்.குமரபுரம் பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட ஆறு அப்பாவி பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.வான் தாக்குதல் கரணமாக 10 வீடுகள் முற்றாக தரைமட்டமாக அழிவடைந்துளதுடன் மேலும் பல வீடுகள் பகுதியளவில்சேதமடைந்துள்ளன.தாக்குதல் வானூர்திகள் வானத்தில் வட்டமிட்டபோது வீடுகளில் தங்கியிருந்த பொதுமக்கள் தமது வீடுகளில் அமைத்துவைத்திருந்த பதுங்கு குழிகளுக்குள் சென்று பதுங்கிக்கொண்டமையினால் பெரும் உயிரழிவில் இருந்து மக்கள் தப்பிக்கொண்டனர்.தாக்குதல் நடைபெற்றபொழுது நாடாளுமன்ற உறுப்பினராகிய நான் சம்பவம் நடைபெற்றதையறிந்து அந்த இடத்திற்கு நேரில்சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து கலந்துரையாடினேன்.தாக்குதல் நடைபெற்ற பொழுது பொதுமக்கள் தமது வீடுகளில் இருந்த பதுங்கு குழிகளுக்குள் சென்று பாதுகாப்புத் தேடியிருக்காவிட்டிருந்தால் ஆகக்குறைந்தது 16 பொதுமக்களாவது கொல்லப்பட்டிருப்பார்கள். மக்களது தற்காப்பு நடவடிக்கையினால் பெரும்மனித அழிவு தவிர்க்கப்பட்டுள்ளது.பரந்தன் இந்து மகா வித்தியாலயம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 250 மீற்றர் தூரத்தில் குண்டுத்தாக்குதல்நடைபெற்றுள்ளது.தாக்குதல் நடைபெற்ற சமயம் சுமார் 1,300 மாணவர்கள் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்ததாக பாடசாலையின் பதில்அதிபர் தெரிவித்தார்.தாக்குதல் நடைபெற்ற பொழுது மாணவர்கள் சிதறி ஓடியபோது வான் குண்டுத்தாக்குதலில் மூன்று மாணவர்கள்படுகாயமடைந்துள்ளனர் வகுப்பறைகளும் சேதமடைந்துள்ளன.தாக்குதலில் கொல்லப்பட்டவர்களது பெயர் விபரங்கள் வருமாறு:சங்கரலிங்கம் சிவநாதன் (வயது 36)சிவநாதன் சிவமணி (வயது 24)தங்கநாதன் சிவநேசன் (வயது 29)காயமடைந்தவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு:மாணவன் கிறிஸ்ரி (வயது 16)மாணவன் கனிஸ்ரன் (வயது 15)மாணவன் தனுசன் (வயது 15)சுகுமார் ரதி (வயது 41)வி.காண்டீபன் (வயது 29)அ.பத்மசீலன் (வயது 37)தாக்குதல் நடைபெற்ற இடத்தில் பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்து வந்து தற்காலிக குடிசைகளை அமைத்து வாழ்ந்துவந்திருந்தனர். தாக்குதலில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களது வீடுகள் பல அழிவடைந்துள்ளன.தாக்குதல் நடைபெற்ற இடத்தினை பார்க்கும் பொழுது இத்தாக்குதலானது பொதுமக்களை இலக்குவைத்து பொதுமக்கள் செறிவாகவாழும் குடியிருப்பு பகுதி மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகவே உணர முடிகின்றது.நேற்றய நாள் நடைபெற்ற இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்றய நாள் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவித்த,இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அப்படியானதொரு தாக்குதலை தாம் நடாத்தவில்லை எனவும் அது வெறும்கட்டுக்கதை என்றும் கூறி உண்மையை மூடிமறைத்துள்ளார்.இராணுவப் பேச்சாளரின் இக்கருத்தினை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன். தாக்குதல் நடைபெற்ற இடத்தினை நான் நேரில்சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு சம்பவத்தினை உறுதிப்படுத்தியுள்ளேன்.தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கையை மூடிமறைக்க இராணுவப் பேச்சாளர் முயற்சித்துள்ளார் என்பதனையே அவரதுகூற்றில் இருந்து உணர முடிகின்றது.சிறிலங்கா அரசின் தூதுவராக பசில் ராஐபக்ச அவர்கள் இந்தியாவுக்கு சென்று அங்கு தமிழ் மக்களது பாதுகாப்பு தொடர்பாகஉறுதிமொழி வழங்கி இரண்டு நாட்கள் கழிவதற்குள் இவ்வாறான படுகொலையை சிங்கள வான்படை நிகழ்த்தியுள்ளது.இந்திய மத்திய அரசிற்கு தமிழ் மக்களது பாதுகாப்புத் தொடர்பாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் கூட தமிழ்மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளில் எந்தவித மாற்றமும் இன்றி சிறிலங்கா அரச படைகளால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அளம்பில் எறிகணை வீச்சில் மக்கள் குடியிருப்புகள் நாசம் [வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2008, 08:37 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் செம்மலை மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை வீச்சில் மக்களின் எட்டு வீடுகள் அழிந்தும் சேதமாகியுமுள்ளன. சிறிலங்கா படையினர் நேற்று வியாழக்கிழமை மணலாறு பகுதியில் இருந்து அளம்பில் செம்மலை மக்கள் குடியிருப்புக்கள் மீது செறிவான எறிகணைத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் ம.செல்வரட்ணம் மற்றும் ச.சந்திரா ஆகியோரின் வீடுகள் அழிந்துள்ளன.
மேலும் ச.வித்தியானந்தன், ப.சுயந்தினி, ச.அரசரத்தினம், அன்புராசா, சௌந்தரராசன், சி.சாமித்தம்பி ஆகியோரின் வீடுகள் சேதமாகியுள்ளன.
அளம்பில் பகுதியில் கடற்கரையில் இரதன் மற்றும் சின்னராசா ஆகியோரின் மீன் வாடிகளும் சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் சேதமாகியுள்ளன.
கேள்வி: மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தியாக இருக்கிறதா?
பதில்: இதிலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களெல்லாம் முடிவடைந்தால்தான் முழு திருப்தி அடைய முடியும் என்று நம்புகிறேன்.
கேள்வி: உடனடி தீர்வு, போர் நிறுத்தம்தான் என்றால் நோர்வே தூதுக்குழு தலையிட்டதுபோல் இலங்கையில் உடனடி போர் நிறுத்தத்திற்கு முயற்சிக்கப்படுமா?
பதில்: இப்பொழுது நோர்வே மாதிரி எல்லாம் ஆகாது. அப்படி பேச்சு எதுவும் இல்லை.
கேள்வி: போர் நிறுத்தம் உண்டா?
பதில்: கிட்டத்தட்ட அவர் சொல்கிற மாதிரி 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிற ஒரு போராட்டம் இது. இது நான்கு நாட்களில் முடியாது. நாம் போர் நிறுத்தம் வேண்டும் என்று சொன்னது, பொதுமக்களை இன்னல்களிலிருந்து காப்பாற்றுவதற்காக தான்.
இப்பொழுது சிறிலங்கா அரசு, நாங்கள் பொதுமக்களை நிச்சயமாக தாக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை அளித்திருக்கிறார்கள்.
போர் நிறுத்தத்திற்கு உடனே அமர்ந்து பேச வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதை இந்தியாவே முன்னின்று நடத்துகிறதா?
அல்லது வேறு நாடுகளுடைய முயற்சியால் நடைபெறுகிறதா? அல்லது வேறு ஏதாவது ஒரு அமைப்பின் மூலம் நடைபெறுவதா?
என்பது பற்றி இன்னும் தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை. இருந்தாலும் போர் நிறுத்தத்திற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு, அவைகள் மேற்கொள்ளப்படுவதற்கு தடை எதுவும் இப்பொழுது இல்லை.
கேள்வி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல் பற்றி...
பதில்: அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். இப்பொழுது அந்த முடிவை நிறைவேற்றினால், இந்தியாவிலே அரசியல் நிலைமை பல சிக்கல்களுக்கு ஆளாகும். ஆகவே அந்த முடிவை ஒத்திவையுங்கள் என்று பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கேள்வி: மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி பேசும்போது, நான் முதலமைச்சரிடம் பேசினேன். அவர் மத்திய அரசுக்கு எந்தநெருக்கடியும் தரமாட்டேன் என்று உறுதிமொழி அளித்திருப்பதாக சொல்லியிருக்கிறாரே?
பதில்: மத்திய அரசுக்கு சிக்கல் உருவாக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். நிச்சயமாக உருவாக்க மாட்டேன் என்று சொன்னேன்.
கேள்வி: விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று பிரபாகரன் ஒரு அறிக்கை விட்டிருக்கிறாரே, அது பற்றி தங்கள் கருத்து என்ன?
பதில்: அதற்கு இந்திய அரசுதான் கருத்து தெரிவிக்க வேண்டும். நான் எப்படி கருத்து சொல்ல முடியும்!
கேள்வி: சிறிலங்காவின் தூதுக்குழு சார்பாக பசில் ராஜபக்ச கூறிய கருத்துகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறதா?
பதில்: இன்றைக்குத்தான் வந்து சில கருத்துகளை சொல்லியிருக்கிறார். அதை நம்முடைய மத்திய அரசு சிந்தித்து முடிவெடுக்கும் என்று நான் நம்புகிறேன்.
கேள்வி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகலுக்கு 28 ஆம் நாள் கெடு கொடுத்திருந்தீர்களே, தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அது தேவையில்லை என்று கருதுகிறீர்களா?
பதில்: இன்றைக்கு நடைபெற்ற நிகழ்ச்சியை நம்முடைய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி விளக்கியிருக்கிறார். அதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள். அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அப்போது எடுத்த முடிவில் அந்த கட்சிகளுக்கிடையே மாறுபட்ட கருத்துகள் இருப்பதால் அவர்களையும் கலந்துகொண்டுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார் கருணாநிதி.
புதுடில்லியும், கொழும்பும் "உண்மையான நண்பர்கள்' என்று குறிப்பிட்ட பசில் ராஜபக்ஷ, விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படாமல் தனது நாடு பார்த்துக்கொள்ளும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
யுத்தத்தால் இடம்பெயர்ந்த தமிழர்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருந்து, உணவுப் பொருட்களை வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது. யுத்த வலயத்திற்கு சென்று ஐ.நா. முகவரமைப்புகள் நிலைமையை மதிப்பீடு செய்யும்.
இரு நாடுகளுமே இதய சுத்தியுடனான நண்பர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன என்று வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார். "உண்மையான நண்பன்' என்பதை இந்தியா நிரூபித்து விட்டது. அவர்கள் நிரூபித்து விட்டனர். எமது பிரச்சினைகளை அவர்கள் நன்றாக விளங்கிக் கொண்டுள்ளனர் என்பதை நாம் கண்டு கொண்டோம் என்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இலங்கையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு நிர்ப்பந்திக்கும் சாத்தியத்தை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.
"பொதுமக்களின் பாதுகாப்புக்காக எம்மால் முடிந்தவை அனைத்தையும் நாம் செய்ய வேண்டிய தேவை உள்ளது என்பதை நாம் உணர்ந்துள்ளோம். அது தொடர்பாக நாம் ஆராய்கின்றோம். பொதுமக்களுக்கு எந்தவொரு இழப்புகளும் ஏற்படாமல் அல்லது ஆகக்
குறைந்தளவாக வைத்திருப்பதை உறுதிப்படுத்த நாம் விரும்புகிறோம்' என்றும் பசில் கூறியுள்ளார்.
அங்கு (வன்னியில்) குறிப்பிட்ட சில நெருக்கடிகள் (பொதுமக்களுக்கு) உள்ளன. அதனை ஏற்றக் கொள்கிறோம். அவற்றைக் குறைப்பதற்கு விரும்புகிறோம். இப்போது கிளிநொச்சியில் பொதுமக்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
முழுப் பிராந்தியத்தின் சனத்தொகை 2 இலட்சத்து 50 ஆயிரமாகும். யாவரும் இடம்பெயர்ந்தவர்கள் அல்ல. இடம்பெயர்ந்தவர்கள் என்றால் அவர்களுக்கு நாம் பங்கீட்டுப் பொருளை வழங்க வேண்டியிருக்கும். முல்லைத்தீவு மக்கள் தமது வீடுகளிலேயே
இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு கொள்வனவு சக்தி இல்லை. பங்கீட்டுப் பொருட்களை வழங்குவதால் அவர்களை இடம்பெயர்ந்தவர்களென நாம் அழைக்கிறோம். மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களைச்சேர்ந்த மக்கள் மட்டுமே இடம்பெயர்ந்துள்ளனர்.
தற்போது மழை ஆரம்பித்து விட்டது. வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பான நடவடிக்கை எடுக்கவேண்டியது எமது பொறுப்பு. இது தொடர்பாக இந்திய அரசுடன் ஆராய்ந்தோம். 100 தொன் உணவு, மருந்துப் பொருட்களை
அனுப்புவதாக அவர்கள் (இந்தியா) கூறியுள்ளனர். விநியோகம் தொடர்பாக வாரம் தோறும் இந்திய உயர் ஸ்தானிகருடன் நாம் கலந்துரையாடல்களை மேற்கொள்வோம். இலங்கையிடம் விநியோக ஏற்பாடுகள் உள்ளன. ஐ.நா. முகவரமைப்புகள் அப்பகுதிகளுக்கு செல்லும். அவர்கள் எமக்குத் தகவலைத் தருவார்கள்.
இலங்கை நிலைவரம் தொடர்பாக சிறப்பான விதத்தில் புதுடில்லி தகவல்களைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் ஏன் இடம்பெறுகின்றன என்பது குறித்தும் கொழும்பு நன்றாக விளங்கிக் கொண்டுள்ளது என்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இந்திய மீனவர்களின் பிரச்சினை பற்றிக் குறிப்பிடுகையில், மீனவர்கள் சர்வதேச கடல் எல்லை பற்றி கவனிப்பதில்லை. மீன் எங்கேயிருக்கின்றது என்றே அவர்கள் செல்வார்கள் என்றும் ராஜபக்ஷ தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் பற்றிக் குறிப்பிடுகையில், தமிழ் மக்களிடமிருந்து புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அவரின் புலனாய்வுத் தலைவரையும் தனிமைப்படுத்த அரசாங்கம் முயற்சித்ததாக பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
சில விடயங்களை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. போத்தலில் இரு மீன்கள் இருந்தால் தண்ணீருக்குள் இருந்து மீன்களை வெளியே எடுக்க வேண்டும் அல்லது தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அரசாங்கம் இரண்டையும் செய்கிறது. மக்களிடமிருந்து
அவர்களை தனிமைப்படுத்த விரும்புகிறோம். தனிப்பட்டவர்கள் மீது பயங்கரவாதிகளாக இருந்தாலும் நாம் எதிரானவர்கள் அல்ல.
பயங்கரவாதத்துக்கு மட்டுமே நாம் எதிரானவர்கள் என்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
Posted online: Oct 28, 2008 at 2304 hrs
Chennai, Oct 27
Tamil Nadu chief minister M Karunanidhi is satisfied with the initiative the Centre has taken to help Tamils caught in the conflict between the Sri Lankan army and LTTE, Mukherjee said on Tuesday.
‘‘The CM assured me that he will not precipitate any crisis in the UPA,’’ Mukherjee added. Withdrawal of support could have forced a vote of confidence in Prime Minister Manmohan Singh’s government, ahead of elections due in 2009.
Mukherjee flew to Chennai from New Delhi to brief Karunanidhi about his earlier discussions with Sri Lankan special envoy Basil Rajapaksa. Karunanidhi has demanded a ceasefire between the Sri Lankan government forces and the LTTE, a militant group that has been fighting for a separate Tamil homeland since 1983.
Mukherjee called for patience, and ruled out any Indian involvement in solving the conflict, which the government says must be solved through dialogue.
‘‘The problems, which are continuing for more than several decades, are not expected to be solved within a few weeks,’’ he said.
In talks with the Sri Lankan envoy, Mukherjee stressed the need for an immediate ‘‘real devolution of power’’ for Tamils in areas cleared of the LTTE as a confidence-building measure.
Mukherjee said the Sri Lankan government had promised to give aid relief to an estimated 200,000 displaced Tamils, and said the Indian federal government would provide 800 tonne of relief materials as well.
The external affairs minister said there could be no military solution to the ethnic issue and during the talks with its envoy India has called on Sri Lanka to give due consideration to political solution of the problem.
India, expected Lanka to take steps so that there should be no firing by Lankan navy on Indian fishing vessels, he said.
India-Sri Lanka Joint Press Release 26/10/2008 Keeping in mind the close bilateral relations between India and Sri Lanka, President of Sri Lanka Mahinda Rajapaksa sent as his Special Envoy
Honourable Basil Rajapaksa, Member of Parliament and Senior Advisor to the President of Sri Lanka to visit New Delhi, on 26th October 2008. During his visit, the Sri Lankan Special Envoy held discussions with External Affairs Minister, National Security Advisor and Foreign Secretary.
The Indian side appreciated deeply the initiative of President Mahinda Rajapaksa to send his Special Envoy. The discussions were positive and constructive and centered around a range of issues.
India conveyed its concern at the humanitarian situation in the northern part of Sri Lanka, especially of the civilians and internally displaced persons caught in the hostilities and emphasised the need for unhindered essential relief supplies. Mr. Rajapaksa briefed the Indian authorities of the efforts by
the Sri Lanka Government to afford relief and ensure the welfare of the civilian population in the North. He assured that the safety and wellbeing of the Tamil community in Sri Lanka is being taken care of.
As a gesture of goodwill, India has decided to send around 800 tonness of relief material to Sri Lanka for the affected civilians in the North. The Government of Sri Lanka will facilitate the delivery. Both sides agreed to consult and cooperate with each other in addressing these humanitarian issues.
Both sides discussed the need to move towards a peacefully negotiated political settlement in the island including in the North. Both sides agreed that terrorism should be countered with resolve. The Indian side called for implementation of the 13th Amendment and greater devolution of powers to the
provinces. Mr. Basil Rajapaksa emphasized that the President of Sri Lanka and his Government were firmly committed to a political process that would lead to a sustainable solution.
Both sides agreed to further nurture the democratic process in the Eastern Province. Mr. Rajapaksa briefed the Indian side of the large development effort underway in the Eastern Province.
With regard to issues relating to fishermen, in view of the humanitarian and livelihood dimensions involved, both sides agreed to put in place practical
arrangements to deal with bona fide Indian and Sri Lankan fishermen crossing the International Maritime Boundary Line and to continue discussions on the proposed MOU on development and cooperation in the field of fisheries.
Discussions in New Delhi during Mr. Rajapaksa's visit were characterized by a spirit of constructive engagement on both sides. Both Governments will remain in close touch.
Press Releases Ministry of External Affairs, New Delhi
INDIA: Senior Presidential Advisor MP Basil Rajapaksa said yesterday after talks with Indian leaders that New Delhi and Colombo were “genuine friends”
and that his country would keep civilian casualties in the war against the Tigers “to the very minimum”.
MP Rajapaksa, who visited India as a special envoy of President Mahinda Rajapaksa, said that torrential rains and flooding had affected Tamils displaced by the fighting in the North and that India had pledged to provide food and medicine for them.
He added that UN agencies would visit the war zone to assess the situation. “Both countries are proving to be genuine friends. This is true for the people of the two countries too,” Rajapaksa told IANS, a day after meeting
External Affairs Minister Pranab Mukherjee and other officials.
“India has really proved to be a real friend. They are friends of Sri Lanka,” said Rajapaksa.
“We found they (India) have understood very well our problems.” “We also realise that we need to do everything we can do for the safety of civilians (in the war zone). We are discussing (this issue with India),” said Rajapaksa. “We want to ensure zero civilian casualties or at least keep it to the very
minimum.”
Providing a gist of his talks here, Rajapaksa told IANS: “There are certain hardships (to civilians). We agree. We want to minimise them. There are no civilians now in Kilinochchi.
They have gone deep into LTTE territory, beyond our firing range. “In Kilinochchi town, no Government office is functioning, only the hospital is operational. That too is Government controlled. All civilians have moved out. If there are some in Kilinochchi, they are LTTE cadres.”
“The whole population (in the region) is 250,000. Everyone is not an IDP. By IDPs we mean those we have to give rations to. In Mullaitivu people are still in their houses but they have no buying power. For the sake of giving rations, we call them IDPs. Only the people in Mannar and Kilinochchi districts are
displaced. “Now the rains have started, there are floods. People are affected. It is our responsibility.
“We discussed this with the Indian government. They said they would send 100 tonnes of food and medicines. For distribution we will have discussions every week with the Indian high commissioner in Colombo.
Sri Lanka will have the distribution network. All UN organisations will visit the area. They will provide us information.”
Crediting New Delhi with having “very good information” about the Sri Lanka situation, Rajapaksa also said that Colombo “understands very well” why there have been vocal protests in Tamil Nadu about his country.
He referred to the problems of the Indian fishing community in passing, saying: “Fishermen don’t care for the international maritime boundary. They go where the fish is”.
Referring to the LTTE, Rajapaksa said his Government’s attempt was to “isolate from the (Tamil) people” from LTTE leader Velupillai Prabhakaran and his intelligence chief.
“There are a few things the government is doing. Suppose if there are two fish in a bottle, we can either take the water out or the fishes out.
The government is doing both. We want to isolate them from the people. But we are not against individuals or even terrorists. We are only against terror.”
His remarks followed extensive discussions on the situation in his country with Indian officials in the wake of mass protests in Tamil Nadu demanding a ceasefire.
India has categorically ruled out the possibility of forcing a truce in Sri Lanka. Indian External Affairs Minister Pranab Mukherjee, who had flown in from Delhi to brief Karunanidhi about the latest political developments on the Lankan Tamils’ issue, told reporters after the meeting that India could not ask
for a ceasefire in Lanka as it would amount to interfering in the internal affairs of another country.
“India is not a party to the ceasefire,’’ he said by way of replying to Tamil Nadu Chief Minister Karunanidhi’s demand for ensuring the ceasefire. Mukherjee said Karunanidhi had also assured him that he would not embarrass the UPA government by asking the DMK MPs, including ministers from Tamil Nadu to quit over the issue.
The External Affairs Minister said his meeting with Lankan Special Envoy Basil Rajapaksa, earlier in Delhi, had been fruitful as it had given the indication for a package to be pushed through politically by President Mahinda Rajapaksa towards ending the ethnic conflict.
No comments:
Post a Comment